பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 120 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்


பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 120 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
x

எலந்தூர் அருகே அரசுப்பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 120 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹாசன்:

120 பேருக்கு வாந்தி-மயக்கம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவில் உள்ள கெஸ்துரு கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கன்னட மொழியிலும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 330 பேர் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மதியம் இந்த பள்ளியில் மதியம் உணவு வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்களில் 120 பேருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த ஆசிரியர்கள் உடனே அனைவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மகேஷ் எம்.எல்.ஏ சென்று மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோருக்கு தைரியம் கூறினார். விசாரணையில் பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டதால், மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாசனில்...

இதேபோல் ஹாசன் மாவட்டம் பாள்யா கிராமம் பெட்டள்ளி பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முதலாவது வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதியம் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதில் உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த ஆசிரியர்கள் உடனே அவர்களை மீட்டு பாள்யாவில் உள்ள அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்கள் சாப்பிட்ட உணவை ஆய்விற்காக பெங்களூரு ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story