ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை தாமதமாக டெலிவரி செய்த ஊழியருக்கு வீட்டு வாசலில் 'ஆரத்தி' எடுத்த நபர்! வைரல் வீடியோ


ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை தாமதமாக டெலிவரி செய்த ஊழியருக்கு வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்த நபர்! வைரல் வீடியோ
x

சற்று வித்தியாசமாக ஒரு நபர், டெலிவரி செய்த ஊழியரை திட்டுவதை விட, அவரை வரவேற்று வணங்கினார்.

புதுடெல்லி,

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வீட்டிற்கு டெலிவரி செய்ய தாமதம் ஏற்படும் போது பொதுவாக மக்கள் கொதிப்படைவர். ஆனால் சற்று வித்தியாசமாக ஒரு நபர், டெலிவரி செய்த ஊழியரை திட்டுவதை விட, அவரை வரவேற்று வணங்கினார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு போக்குவரத்து, தவறான நிர்வாகம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் சில நேரத்தில் தாமதமாக டெலிவரி செய்யப்படுவது வாடிக்கையான விஷயமே. இதேபோன்றதொரு சம்பவம் டெல்லியிலும் நடந்துள்ளது.

இந்த நிலையில், தாமதமாக டெலிவரி செய்த ஊழியருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.வழக்கமாக, ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 30 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும்.

இந்த நிலையில், டெல்லியில் டெலிவரி செய்பவர் ஒரு மணி நேரம் தாமதமாக உணவை டெலிவரி செய்தார்.அப்போது வீட்டின் கதவை திறந்த வாடிக்கையாளர், 'ஐயே ஆப்கா இன்டெசார் தா..' என்ற பாடலைப் பாடிய படியே கதவைத் திறந்துள்ளார்.

அத்துடன், டெலிவரி செய்த ஊழியருக்கு வீட்டு வாசலில் 'ஆரத்தி' எடுத்ததோடு மட்டுமல்லாமல் நெற்றியில் 'திலகமிட்டு' வரவேற்றார். மேலும், அந்த வாடிக்கையாளர் டெல்லியின் போக்குவரத்து நெரிசலில் கூட தனது உணவை டெலிவரி செய்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அந்த ஊழியரும் இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பெரும் வைரலானது.


Next Story