ஓடும் பஸ்சில் நடிகையிடம் ஆபாச செய்கை வாலிபர் கைது


ஓடும் பஸ்சில் நடிகையிடம் ஆபாச செய்கை வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 May 2023 10:15 PM (Updated: 19 May 2023 10:15 PM)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் நடிகையும், மாடல் அழகியுமான நந்திதா பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த பஸ் அங்கமாலி பகுதியில் வந்த போது சாவத் என்ற வாலிபர் ஏறினார். அவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு நடிகையை பார்த்து ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, சாவத்தை தட்டிக்கேட்டார். உடனே அந்த வாலிபர் நடிகை நந்திதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு சாவத்திடம் சம்பவம் குறித்து தட்டிக்கேட்டார். உடனே, சாவத் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அவரை துரத்தி பிடித்தனர்.

பின்னர் அந்த வாலிபரை நெடும்பாசேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகையிடம் வாலிபர் வாக்குவாதம் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story