கேரளாவின் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கேரளாவிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கேரளாவில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அக்டோபர் 1 ம் தேதியான நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு,வயநாடு,கன்னூர், காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு ஆகிய கடற்பகுதிகளில் மீன் பிடிக்க தடை நீடிக்கின்றது.
மேலும் திருவனந்தபுரம் மற்றும் அதன் மலை பகுதிகளில் அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர குவாரிகள் மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story