மகளிர்க்கான இடஒதுக்கீடு மசோதா, சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையிலிருந்து திசை திருப்பும் நடவடிக்கை - ராகுல் காந்தி


மகளிர்க்கான இடஒதுக்கீடு மசோதா, சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையிலிருந்து திசை திருப்பும் நடவடிக்கை - ராகுல் காந்தி
x

மகளிர்க்கான இடஒதுக்கீடு மசோதா என்பது சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையிலிருந்து திசை திருப்பும் நடவடிக்கை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மகளிர்க்கான இடஒதுக்கீடு மசோதா என்பது சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையிலிருந்து திசை திருப்பும் நடவடிக்கை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

மகளிர்க்கான இடஒதுக்கீடு என்பது நல்ல விஷயம். ஆனால் இது செயல்படுத்தப்படுமா என்பது யாருக்கும் தெரியாது. மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பத்து ஆண்டுகள் ஆகலாம். நடைமுறைக்கு வராமலும் போகலாம். இது சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையில் இருந்து திசை திருப்பும் நடவடிக்கை.

உண்மை என்னவென்றால், மகளிர் இட ஒதுக்கீட்டை இன்றே நடைமுறைப்படுத்த முடியும். அது சிக்கலான விஷயம் இல்லை. ஆனால் அரசு அதை விரும்பவில்லை. நாடு தழுவிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story