பூனைகடிக்கு ஊசிபோட வந்த பெண்ணை நாய் கடித்த கொடுமை


பூனைகடிக்கு ஊசிபோட வந்த பெண்ணை நாய் கடித்த கொடுமை
x

கேரளாவில் பூனைகடிக்கு ஊசிபோட வந்த பெண்ணை நாய் கடித்த கொடுமை நட்ந்து உள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துவருகின்றன. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் இதுவரை, 2022 ஆம் ஆண்டில் ரேபிஸ் காரணமாக 21 பேர் இறந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த் நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா(31). இவரை எதிர்பாராத விதமாக பூனை கடித்ததால் மூன்றாவதுதடுப்பூசி செலுத்த அப்பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். அபர்னாவுடன் இவரது தந்தையும் சென்று உள்ளார். அந்த பெண் காலை எட்டு மணியளவில் சென்ற நிலையில், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக நாற்காலியின் கீழ் படுத்திருந்த தெருநாய் அவரை கடித்துவிட்டது.

இதைக்கண்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை பொதுநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சையும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.


Next Story