கூட்டணி சேரும் முன் ஏன் ராஜினாமா செய்யவில்லை? உத்தவ் தாக்கரேவுக்கு பட்னாவிஸ் கேள்வி

காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி சேரும் முன் ஏன் ராஜினாமா செய்யவில்லை என உத்தவ் தாக்கரேவுக்கு பட்னாவிஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பை,
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று நடந்த கோரேகாவ் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசும் போது, " நான் அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் இன்னும் ஒரு மாதத்தில் மும்பை மாநகராட்சி, மாநில சட்டசபை தேர்தலை நடத்துங்கள். " என்றாா். மேலும் அவர் பா.ஜனதா மற்றும் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், " உத்தவ் தாக்கரேவின் பேச்சு விரக்தியை வெளிப்படுத்துகிறது. நாங்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளோம். எங்களுடன் கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்கு முன் நீங்கள் ஏன் ராஜினாமா செய்யவில்லை?. தேர்தலை சந்தித்து பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி உங்களுக்கு தைரியம் இருந்து இருக்க வேண்டும். " என்றார்.