கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும்? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும்? மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
x
தினத்தந்தி 11 Aug 2022 8:46 AM IST (Updated: 11 Aug 2022 8:57 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, ஜனாதிபதி மாளிகை மற்றும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம்.

புதுடெல்லி,

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி, ஜனாதிபதி மாளிகை மற்றும் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடத்தப்படுவது வழக்கம். அதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கடிதம் எழுதி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேநீர் விருந்தில், மரபுப்படி விருந்தினர்களை அழைப்பதுடன், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களையும் அழைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், முன்கள சுகாதார பணியாளர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர், பத்ம விருது பெற்றவர்கள், கொரோனா காலத்தில் சமூகத்துக்கு வியத்தகு சாதனை செய்தவர்கள், சுற்றுச்சூழல் போராளிகள், 'மன் கி பாத்' உரையில் பிரதமரால் குறிப்பிடப்பட்டவர்கள், பத்ம விருது பெற்றவர்கள், ஊராட்சி பெண் தலைவர்கள் ஆகியோரையும் அழைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு 25 முதல் 50 இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story