'2047-ல் இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்?' - ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பேச்சு


2047-ல் இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்? - ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பேச்சு
x

2047-ல் இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பேசினார்.

புதுடெல்லி,

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநரும், ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியருமான கீதா கோபிநாத், டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு. இந்த வேகத்தை நீண்ட காலத்திற்கு எவ்வாறு தக்கவைப்பது என்பதுதான் தற்போதைய கேள்வி.

இந்தியாவிற்கு மிகவும் திறமையான, கல்வியறிவு கொண்ட உழைப்பாளர்களின் சக்தி தேவை. அதிக வருமானம் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை அழைத்துச் செல்வதற்கு இது மிகவும் முக்கியமானதாகும்.

இந்தியாவின் வளர்ச்சியானது மூலதனத்தை சார்ந்துள்ளது. ஆனால் பணியிடங்கள் நிரப்பப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது. மனித மூலதனம் மற்றும் திறன்மிக்க தொழிலாளர்களில் இந்தியாவுக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.

2047-ல் இந்தியா வல்லரசாக 2030-க்குள் 6 கோடி முதல் 14.8 கோடி வரையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இதில் பெண் பணியாளர்களின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும். பொது உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும்."

இவ்வாறு கீதா கோபிநாத் தெரிவித்தார்.


Next Story