ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி: திருமண மண்டபத்தில் விநோதம்...!


ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதி: திருமண மண்டபத்தில் விநோதம்...!
x

உத்தரபிரதேசத்தின் அம்ரோகா மாவட்டத்தில் நடந்த திருமண பந்தில் செல்ல ஆதார் கார்டு காட்டியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், உறவினர்கள், நண்பர்கள் என தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் வீடியோ ஒன்றில், திருமண விழாவில் விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் தங்களது ஆதார் அட்டையை காட்டிய பிறகே பந்திக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பாதி கதவு மூடப்பட்ட நிலையில், ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு ஒருவர் ஒருவராக உள்ளே செல்கின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பந்திக்கு செல்ல எதற்காக ஆதார் அட்டையை காண்பிக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடைதெரியாமல் சமூகதளவாசிகள் குமுறி வருகின்றனர்.

தகவலின் படி, திருமணம் நடைபெற்ற தினத்தில் செப்-21-ம் தேதி ஒரே மண்படத்தில் 2 திருமணங்கள் நடைபெற்றதால் இரு திருமண வீட்டாரின் உறவினர்களும் குவிந்தனர். குழப்பத்தின் மத்தியில், மணமகளின் குடும்பத்தினர் கலக்கமடைந்து உணவை வழங்குவதை நிறுத்த முடிவு செய்தனர். கூட்டத்தை சமாளிக்க ஆதார் அட்டையை காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்தனர். இருப்பினும், திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அந்த நேரத்தில் அவர்களின் அடையாளச் சான்று இல்லாததால் உறவினர்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.


Next Story