நாடாளுமன்ற தேர்தல்: இந்திய வரலாற்றில் 2-வது பெரிய தேர்தல் காலம்
நாட்டில் பொதுத் தேர்தலுக்கான மிகக் குறுகிய வாக்களிப்பு காலம் 1980-ல் இருந்தது, அது வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நடந்தது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அதேநேரம் ஜூன் 6-ந்தேதி வரை தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் 83 நாட்கள் தேர்தல் காலமாக இருக்கிறது.
இது சுதந்திர இந்திய வரலாற்றில் 2-வது பெரிய தேர்தல் காலமாக கருதப்படுகிறது. முன்னதாக சுதந்திரம் பெற்றபின் 1951-52-ம் ஆண்டு காலத்தில் நடந்த நாட்டின் முதலாவது பொதுத்தேர்தல் சுமார் 4 மாதங்கள் நடந்தது. அதைத்தொடர்ந்து 2-வது நீண்ட தேர்தல் காலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நாட்டில் பொதுத் தேர்தலுக்கான மிகக் குறுகிய வாக்களிப்பு காலம் 1980-ல் இருந்தது, அது வெறும் நான்கு நாட்கள் மட்டுமே நடந்தது.