ராமர் விரோதிகளை தண்டிக்கவே இந்த தேர்தல்: பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு


ராமர் விரோதிகளை தண்டிக்கவே இந்த தேர்தல்: பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா பேச்சு
x

கோப்புப்படம்

இந்த நாடாளுமன்ற தேர்தல் ராமர் விரோதிகள், தேச விரோதிகள், சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் ஆகியோரை தண்டிப்பதற்கான தேர்தல் ஆகும் என்று ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

பாட்னா,

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் நடைபெற்ற பா.ஜனதா பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் தான் ஏழைகளுக்கு நல்லது செய்ய முடியும்.

சோனியா காந்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருந்தபோது, ராமர் இருக்கிறரா? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போதைய அரசு அவரை (ராமர்) கற்பனை கதை என்று கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் அளித்தது.

நடந்து வரும் இந்த நாடாளுமன்ற தேர்தல் ராமர் விரோதிகள், தேச விரோதிகள், இடஒதுக்கீடு, சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானவர்கள் ஆகியோரை தண்டிப்பதற்கான தேர்தல் ஆகும்.

இந்தியா கூட்டணியின் பெரும்பாலான தலைவர்கள் சிறையில் அல்லது ஜாமீனில் உள்ளனர். ஒவ்வொருவரின் நலனும் மோடியின் ஒரே நோக்கம். ஆனால் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க விரும்புகிறார்கள்.

இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.


Next Story