நீதிபதிகளை குறிவைத்து விமர்சிப்பதா? துணை ஜனாதிபதி


நீதிபதிகளை குறிவைத்து விமர்சிப்பதா? துணை ஜனாதிபதி
x

தனிப்பட்ட நீதிபதிகளை குறிவைத்து விமர்சிக்கும் தீங்கான போக்கு துரதிஷ்டவசமாக உருவாகிவருகிறது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார் .

புதிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மூத்த வக்கீலாக பணியாற்றியவர். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசன் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

அதில் பேசிய ஜெகதீப் தன்கர், 'நீதிபதிகள் மீதான கண்ணியமும், நீதித்துறை மீதான மரியாதையும் மீறப்படக்கூடாதவை. காரணம், சட்டத்தின் ஆட்சிக்கும், அரசியலமைப்பு வாதத்துக்கும் இவைதான் அடிப்படை.

சமீபகாலமாக, தனிப்பட்ட நீதிபதிகளை குறிவைத்து விமர்சிக்கும் தீங்கான போக்கு துரதிஷ்டவசமாக உருவாகிவருகிறது. அது கட்டுப்படுத்தபட வேண்டியது' என்றார்.

இந்த நிகழ்வில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேசன் தலைவர் விகாஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story