காணும் பொங்கலை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பாக நடைபெற்ற வேடுபறி உற்சவம்


காணும் பொங்கலை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பாக நடைபெற்ற வேடுபறி உற்சவம்
x

திருமலை திருப்பதியில் நடைபெற்ற வேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணும் பொங்கல் தினத்தன்று பாரிவேட்டை என்ற பெயரில் வேடுபறி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்றயை தினம் திருமலை திருப்பதியில் வேடுபறி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது ஏழுமலையான் கோவிலில் இருந்து பஞ்ச ஆயுதங்களுடன் புறப்பட்ட உற்சவர், பாரிவேட்டை மண்டபத்தை அடைந்தார். அங்கு உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மான், புலி பொம்மைகள் மீது 3 முறை வேல் வீசி எறிந்து வழிபாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story