பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டும் உத்தரகாண்ட் அரசு


பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த  தீவிரம் காட்டும் உத்தரகாண்ட் அரசு
x

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகண்ட்டிற்கு கிடைக்கும்

டேராடூன்,

உத்தர்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. இங்கு தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என ஆளும் பாஜக வாக்குறுதி அளித்து. இதன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் உத்தரகண்ட் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரை மாநில அரசு கூட்டியது. இதில், பொது சிவில் சட்ட மசோதாவை முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி தாக்கல் செய்தார். மசோதா நிறைவேற்றப்பட்டது. மார்ச் 13-ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 9-ம் தேதியன்று உத்தர்கண்ட் மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த தேதியன்று பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மசோதா அமல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமை உத்தரகண்ட்டிற்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.


Next Story