உத்தர பிரதேசம் தஸ்னா சிறையில் கைதிகளுக்கு கல்வி, பொழுதுபோக்குக்காக வானொலி நிலையம் தொடக்கம்
உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் கைதிகளுக்காக வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
காசியாபாத்,
உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் கைதிகளுக்காக வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஆன்மீகம், கல்வி மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான இசைகள் இந்த வானொலியில் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த வானொலி நிலையமானது சிறையில் உள்ள திறமையான கைதிகளால் இயக்கப்படுகிறது.
மன அழுத்தத்தோடு இருக்கக்கூடிய சிறைக் கைதிகளுக்கு மியூசிக் தெரபி மூலம் மனஅமைதி கிடைக்கிறது. மேலும் வெளி உலகத்தைப் பற்றியும் உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் இந்த வானொலி மூலம் கைதிகள் தெரிந்து கொள்கின்றனர்.
சிறையில் உள்ள கைதிகள் அறிவு மற்றும் பொழுதுபோக்கிலிருந்து விலகி இருப்பதால் அவர்களுக்கு வானொலி மூலமாக கல்வி மற்றும் பொழுதுபோக்கு வழங்கப்படுகிறது என்று சிறை கண்காணிப்பாளர் அலோக் சிங் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story