காசியில் மகாகவி பாரதியாரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்


காசியில் மகாகவி பாரதியாரின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசிய மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
x
தினத்தந்தி 18 Nov 2022 9:48 PM IST (Updated: 18 Nov 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

காசியில் வசிக்கும் மகாகவி பாரதியாரின் குடும்பத்தினரை மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேரில் சென்று சந்தித்தார்.

லக்னோ,

மகாகவி பாரதியாரின் மருமகனான கே.வி. கிருஷ்ணன், காசியில் அனுமன் காட் கரையில் உள்ள இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது 96 வயதாகும் கே.வி.கிருஷ்ணனையும், அவரது குடும்பத்தினரையும் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று நேரில் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தர்மேந்திர பிரதான், "தமிழ் இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமையான மகாகவி பாரதியாரின் காசி இல்லத்திற்குச் சென்றது ஒரு புனித யாத்திரை போன்றது.

பாரதியாரின் மருமகனான திரு. கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை காசியில் இன்று சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடந்தேன்.

மகாகவி என்றென்றும் அடுத்த தலைமுறைக்கு உத்வேகமாக இருப்பார். சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் பற்றிய சுப்பிரமணிய பாரதியாரின் இலட்சியங்கள் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

பாரதியாரின் ஆளுமையை வடிவமைப்பதில் காசி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. காசி தமிழ் சங்கமம் நமது இருபெரும் கலாச்சாரங்களுக்கிடையே உள்ள தத்துவ ஒற்றுமையையும் பொதுத்தன்மையையும் கொண்டாடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.




Next Story