டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் அமித்ஷா ஆலோசனை


டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் அமித்ஷா ஆலோசனை
x

டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி 240 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 292 இடங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் மத்தியில் பா.ஜனதா கூட்டணி 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்தநிலையில், நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் 3வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் யார் யாரை புதியதாக சேர்ப்பது, ஏற்கனவே அமைச்சர்களாக இருப்பவர்களில் யார் யாரை விலக்குவது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அமித்ஷா மற்றும் ஜே.பி நட்டா ஆகிய இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும் அதில் சில முக்கிய விவரங்களை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story