மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இங்கிலாந்து பயணம்..!


மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இங்கிலாந்து பயணம்..!
x
தினத்தந்தி 7 Jan 2024 2:14 PM IST (Updated: 7 Jan 2024 4:57 PM IST)
t-max-icont-min-icon

காலிஸ்தானுக்கு ஆதரவான வன்முறைகள் உள்ளிட்டசில தீர்க்கப்படாத சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் செய்ய உள்ளார். அந்நாட்டு பாதுகாப்புச் செயலருடன் விரிவான சந்திப்பு நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவருக்கென, அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் காலிஸ்தானுக்கு ஆதரவான வன்முறைகள் உள்ளிட்ட தீர்க்கப்படாத சில சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story