இலவச உணவு தானியங்கள் திட்டம் நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இலவச உணவு தானியங்கள் திட்டம் நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

கொரோனோ பெருந்தொற்றின் போது 2020-இல் பிரதமரின் இலவச உணவு தானியத் திட்டம் தொடங்கப்பட்டது.

டெல்லி,

உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக பிரதமரின் ஏழைகள் உணவுத் திட்டம் உள்ளது. 81.35 கோடி நபா்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை பிரதமரின் ஏழைகள் உணவுத் திட்டம் உறுதி செய்கிறது. நிகழாண்டு டிசம்பா் 31-ஆம் தேதி முதல் முடிவடையும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.11.80 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பயனாளிகள் நாட்டில் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான நியாயவிலைக் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் ஆகிய இலவச உணவு தானியங்களை தொடா்ந்து வாங்கலாம்.

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படும் பிரிவினரின் நிதி நெருக்கடியையும் குறைக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனோ பெருந்தொற்றின் போது 2020-இல் தொடங்கப்பட்ட பிரதமரின் இலவச உணவு தானியத் திட்டம் 2023 டிசம்பா் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.


Next Story