மத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி


மத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி
x

பெண்கள், சிறுமிகளின் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து கூறியதாவது:-

பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, பணிபுரியும் தாய்மார்களுக்கு ஆதரவாக தொழில்துறைகளில் பணிபுரியும் பெண்கள் விடுதிகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும். இந்த முன்முயற்சிகள் பெண்களுக்கான வேலை, வீடு சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கூடுதலாக, பெண் பணியாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட பெண்கள் சார்ந்த திறன் திட்டங்களை இந்த பட்ஜெட் கோடிட்டுக் காட்டுகிறது.

சமீபத்திய ஊதிய தரவுகள் பெண் பணியாளர்களின் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க உயர்வை காட்டுகிறது. மே 2024 நிலவரப்படி, சுமார் 2.4 லட்சம் பெண்கள் புதிதாக பணிகளில் சேர்ந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 12.1 சதவீதம் ஆகும். அதே போல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண் பணியாளர்களின் நிகர சேர்க்கை 17.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.26,092 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5 சதவீதம் ஆகும்.

அமைச்சகத்தின் கீழ் உள்ள முதன்மைத் திட்டங்களான சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0, மிஷன் வத்சல்யா மற்றும் மிஷன் சக்தி போன்றவை ஊட்டச்சத்து, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் தங்கள் முயற்சிகளைத் தொடர கணிசமான நிதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


Next Story