இரட்டை இலை சின்னம்: தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து எந்த வழக்கும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
Related Tags :
Next Story