மோடி ஆட்சியில் 'ரெயில் பயணம்' தண்டனையாகிவிட்டது - ராகுல் காந்தி


மோடி ஆட்சியில் ரெயில் பயணம் தண்டனையாகிவிட்டது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 21 April 2024 1:40 PM IST (Updated: 21 April 2024 2:17 PM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் சாமானிய மக்கள் தரையிலும், கழிவறையிலும் அமர்ந்து பயணம் செய்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பொதுப்பெட்டிகளை குறைத்து, எலைட் ரெயில்களை மட்டுமே ஊக்குவிக்கும் மோடி ஆட்சியில் அனைத்து தரப்பு பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். பணம் கொடுத்து டிக்கெட் பெற்றாலும் அவர்களால் இருக்கைகளில் அமர்ந்து செல்ல முடிவதில்லை.

சாமானிய மக்கள் தரையிலும், கழிவறையிலும் அமர்ந்து பயணம் செய்கின்றனர். ரெயில்வே துறையை பலவீனப்படுத்தி அதை திறனற்றது என நிரூபித்து தனது நண்பர்களுக்கு விற்கப்பார்க்கிறது பா.ஜ.க. அரசு. சாமானியர்களின் பயணத்தைக்காப்பாற்ற ரெயில்வே துறையை அழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்.என பதிவிட்டுள்ளார்.


Next Story