இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?


இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?
x

கடந்த 1970 ஆம் ஆண்டிற்கு பிறகு நீண்ட சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

புதுடெல்லி,

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. 18 மாதங்களுக்கும், பூமியின் ஒரு பகுதியில் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். சூரிய கிரகணத்தைக் காண உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நூற்றாண்டில், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே இந்த முழு சூரிய கிரகணத்தைக் காண முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது. கடந்த 1970 ஆம் ஆண்டிற்கு பிறகு நீண்ட சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மிக நீண்ட சூரிய கிரகணம் ஆகும். 5 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடிக்கும் என கூறப்படுகிறது.

இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணம், அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெறுவதால் நம்மால் பார்க்க முடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரிய கிரகணத்தின் போது சந்திரன் பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில் காணப்படும். இதனால் சந்திரன், பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதனால் சூரிய கிரகணத்தின் போது இருள் இருக்கும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதன் பின்னர் 2150 ஆம் ஆண்டு வரை இது போன்ற ஒரு அரிய கிரகணம் நடைபெறாது என்கிறார்கள்.


Next Story