திருப்பதி: போலி டிக்கெட்டுகளுடன் வந்தவர்களை கோவிலுக்குள் அனுப்ப முயற்சி - ஸ்கேன் மைய ஊழியர்கள் சிக்கினர்


திருப்பதி: போலி டிக்கெட்டுகளுடன் வந்தவர்களை கோவிலுக்குள் அனுப்ப முயற்சி - ஸ்கேன் மைய ஊழியர்கள் சிக்கினர்
x

திருப்பதி கோவிலில் போலி டிக்கெட்டுகளுடன் வந்தவர்களை சாமி தரிசனம் செய்ய அனுப்ப முயன்ற ஸ்கேன் மைய ஊழியர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமலை,

ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பீகாரைச் சேர்ந்த 8 பக்தர்கள் ரூ.300 டிக்கெட்டில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் கொண்டு வந்த ரூ.300 டிக்கெட்டுகளை ஸ்கேன் மையத்தில் பணியில் இருந்த ஊழியரும் திருப்பதியைச் சேர்ந்தவருமான வெங்கடேசன் என்பவர் ஸ்கேன் செய்வதுபோல் நடித்து, 8 பக்தர்களை சாமி தரிசனத்துக்காக கோவிலுக்குள் அனுப்பி வைக்க முயன்றார்

அந்த பக்தர்கள் கொண்டு வந்த ரூ.300 டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ரூ.300 டிக்கெட்டுகள் அனைத்தும் போலியானது (பழைய டிக்கெட்) எனத் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்தப் பக்தர்களை வெளியே அனுப்பி வைத்தனர்.

ஸ்கேன் மைய ஊழியர் வெங்கடேசனுக்கு உதவியாக, ராஜு என்ற ஊழியரும் செயல்பட்டுள்ளார். இதையடுத்து 2 ஊழியர்களை தேவஸ்தான பறக்கும்படை அதிகாரிகள் பிடித்து திருமலை 2-டவுன் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story