சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வருகை


சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வருகை
x

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் முகலாய அரசர்கள் ஆண்டபோது, அவர்களிடம் படை தளபதியாக இருந்தவர் அப்சல் கான். மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவாக இருந்து ஆட்சி செய்தபோது, அவரை தாக்க சூழ்ச்சி நடந்தது. இதனை அவர் அறிந்து கொண்டார். சிவாஜியை அப்சல் கான் தாக்கும்போது, அதற்கு பதிலடியாக புலி நகம் கொண்டு அவரை சிவாஜி தாக்கினார்.

இந்த சம்பவத்தில், அப்சல் கான் கொல்லப்பட்டார். இதற்கு பயன்படுத்திய புலி நகம் பின்னர், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அதனை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மராட்டிய அரசு ஈடுபட்டது.

இதன் ஒரு பகுதியாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மியூசிய நிர்வாகிகள் முன்னிலையில் மராட்டிய மந்திரி சுதீர் முங்கந்திவார் மற்றும் உதய் சமந்த் ஆகியோர் கடந்த அக்டோபரில் ஏற்படுத்தினர். இதன்படி, இந்த புலி நகம் 3 ஆண்டு காலத்திற்கு இந்தியாவில் வைக்கப்படும்.

இந்தியாவில், சத்ரபதி சிவாஜி முடிசூட்டி 350 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்த சூழலில், அந்த புலி நகம் இந்தியாவுக்கு நாளை கொண்டு வரப்பட உள்ளது. இதன்பின், பொதுமக்கள் பார்வைக்காக மியூசியத்தில் அது காட்சிப்படுத்தப்படும்.


Next Story