'குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பா.ஜ.க. மக்களை பிரிக்க நினைக்கிறது' - மம்தா பானர்ஜி


குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பா.ஜ.க. மக்களை பிரிக்க நினைக்கிறது - மம்தா பானர்ஜி
x

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, நாட்டின் பிற பகுதிகளில் 'இந்தியா' கூட்டணி போட்டியிட்டாலும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "குடியுரிமையை பொறுத்தவரை, இலவச ரேஷன், ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற உரிமைகளை பெற்றுள்ள நீங்கள் அனைவருமே இந்நாட்டின் குடிமக்கள்தான். குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் பா.ஜ.க. மக்களை பிரிக்க நினைக்கிறது. குடியுரிமையை வைத்து பாகுபாடு காட்ட முயல்வது தவறு" என்று தெரிவித்தார்.


Next Story