பறவைகளின் வீடாக இருந்த மரம்... வெட்டி சாய்த்த கொடூரர்கள்... கொத்துக் கொத்தாக இறந்த சோகம்


பறவைகளின் வீடாக இருந்த மரம்... வெட்டி சாய்த்த கொடூரர்கள்... கொத்துக் கொத்தாக இறந்த சோகம்
x
தினத்தந்தி 2 Sept 2022 4:50 PM IST (Updated: 2 Sept 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

மலப்புரம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்பட்ட மரத்தால் ஏராளமான பறவைகள் உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் அருகே விகேபடி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்காக இந்த பகுதியில் சாலையோர உள்ள மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சாலையோரம் உள்ள ஒரு பழமை வாய்ந்த மரத்தை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றினர். அப்போது அந்த மரத்தில் கூடுகளில் இருந்த ஏராளமான பறவைக் குஞ்சுகள் தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பறவைகள் நல ஆர்வலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story