நாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம் என்ற செய்தி இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் - மத்திய மந்திரி


நாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம் என்ற செய்தி இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் - மத்திய மந்திரி
x

நாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம் என்ற செய்தி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார்.

பனாஜி,

கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற உள்ள 9-வது உலக ஆயுர்வேத மாநாடு மற்றும் ஆரோக்கிய கண்காட்சியையொட்டி (8-11, டிசம்பர், 2022) நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் மத்திய ஆயுஷ்துறை மந்திரி சர்பானந்த சோனாவால் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாள்தோறும் இல்லம்தோறும் ஆயுர்வேதம்" என்ற செய்தி ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இயற்கை பாதுகாக்கப்பட்டால் மட்டுமே மனிதர்களாகிய நாம், வாழமுடியும் என்று தெரிவித்தார். இயற்கையைப் பாதுகாப்பதில் மனித சமுதாயத்திற்கு மிகப் பெரிய கடமை இருகப்பதாகக் கூறினார்.

பாரம்பரிய மருத்துவமே அறிவியல் என்று தெரிவித்த அவர், இயற்கையின் சக்தி, செல்வம் ஆகியவற்றை நாம் புரிந்து கொண்டு அதை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டார். கோவாவில் மருத்துவ சுற்றுலாவிற்கான உள்கட்டமைப்புக்கு தேவையான உதவிகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.


Next Story