இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான போர் பீரங்கி இன்று பரிசோதனை


இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான போர் பீரங்கி இன்று பரிசோதனை
x

இந்திய ராணுவத்தினரின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜொராவர் என்ற இலகு ரக போர் பீரங்கி குஜராத்தின் ஹஜீரா பகுதியில் இன்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

புதுடெல்லி,

நாட்டின் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிழக்கு லடாக் பிரிவில் இந்திய ராணுவத்தினரின் தேவைகளுக்காக ஜொராவர் என்ற இலகு ரக போர் பீரங்கியை பயன்படுத்த முடிவானது. இதன்படி, 59 பீரங்கிகளை உற்பத்தி செய்வதற்காக இந்திய ராணுவம் ஆர்டர் செய்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தின் ஹஜீரா பகுதியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டி.ஆர்.டி.ஓ.) பரிசோதனை செய்து பார்த்தது. டி.ஆர்.டி.ஓ. மற்றும் எல் அண்டு டி நிறுவனம் இணைந்து இதனை கட்டமைத்து உள்ளது.

இந்த பீரங்கி சீனாவுக்கு எதிராக எல்லையில் பயன்படுத்தப்படும். 2 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள், சாதனையாக உருவாக்கப்பட்ட இந்த பீரங்கி 25 டன் எடை கொண்டது. மலைகள் மற்றும் ஆறுகளின் குறுக்கேயும் மற்றும் பிற நீர்நிலைகளிலும் எளிதில் செல்ல கூடியவை.

லடாக் மற்றும் மேற்கு திபெத் பகுதியில் படையை வழிநடத்தி சென்ற, 19-வது நூற்றாண்டை சேர்ந்த ஜெனரல் ஜொராவர் சிங்கின் நினைவாக இந்த பீரங்கியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த வகை பீரங்கிகள் வருகிற 2027-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படும்.


Next Story