பயங்கரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்


பயங்கரவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
x
தினத்தந்தி 29 Nov 2022 2:48 PM IST (Updated: 29 Nov 2022 2:51 PM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டிய பயங்கரவாதம் மனித குலத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் ஐஎஸ்ஐஎஸ்-ஆல் தூண்டப்பட்ட பயங்கரவாதம் மனித குலத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் மதங்களுக்கிடையிலான அமைதி மற்றும் சமூக நல்லிணக்க கலாச்சாரத்தை வளர்ப்பதில் உலமாக்களின் பங்கு குறித்த மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது,

நீங்கள் அனைவரும் அறிந்தது போல, நமது இரு நாடுகளும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சவால்களை கணிசமான அளவில் நாங்கள் சமாளித்துவிட்டாலும், எல்லை தாண்டிய மற்றும் ஐஎஸ்ஐஎஸ்-ஆல் தூண்டப்பட்ட பயங்கரவாதத்தின் நிகழ்வு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது.

சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இந்திய மற்றும் இந்தோனேசிய உலமாக்கள் மற்றும் அறிஞர்களை ஒன்றிணைப்பதே இந்த விவாதத்தின் நோக்கம்.

பயங்கரவாதம் மற்றும் மதத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை எந்தத் சூழலிலும் நியாயமானவை அல்ல. இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இஸ்லாத்தின் அர்த்தத்திற்கு எதிரானது. ஏனெனில் இஸ்லாம் என்றால் அமைதி மற்றும் நல்வாழ்வு என்று பொருள்படும். அத்தகைய சக்திகளுக்கு எதிர்ப்பை எந்த மதத்துடனும் மோதலாக சித்தரிக்கக்கூடாது.

"அதற்கு பதிலாக, நமது மதங்கள் கூறியபடி மனிதநேயம், அமைதி மற்றும் புரிதல் ஆகியவற்றின் மதிப்புகளை நிலைநிறுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில்,

புனித குர்ஆன் கற்பிப்பது போல், ஒருவரைக் கொல்வது அனைத்து மனிதகுலத்தையும் கொல்வதற்கு சமம். அதற்கு பதிலாக ஒருவரைக் காப்பாற்றுவது ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் காப்பாற்றுவதற்கு ஒப்பானது. இவ்வாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார்.


Next Story