சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்


சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்
x

உரிய நேரத்தில் கோளாறை கண்டறிந்து தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக தேவரகத்ராவில் நேற்று மாலையில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவரும், மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர் ராவ், ஐதராபாத் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

ஆனால் அது புறப்பட்ட 20 நிமிடங்களில் ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கவனித்த விமானி சுதாரித்துக்கொண்டு ஹெலிகாப்டரை மீண்டும் முதல்-மந்திரியின் பண்ணை வீட்டுக்கே திருப்பினார். பின்னர் அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் சந்திரசேகர் ராவின் பயணத்துக்காக மற்றொரு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story