நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.14.70 லட்சம் கோடி வரி வசூல்


நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.14.70 லட்சம் கோடி வரி வசூல்
x
தினத்தந்தி 11 Jan 2024 5:38 PM IST (Updated: 11 Jan 2024 6:35 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 10-ந்தேதி வரையிலான நேரடி வரி வசூல், நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி ரூ.14.70 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாகவும், முழு ஆண்டு இலக்கில் 81 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 19.41 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10-ந்தேதி வரையிலான நேரடி வரி வசூல், நிலையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் மொத்த கார்ப்பரேட் வருமான வரி (சி.ஐ.டி.) மற்றும் தனிநபர் வருமான வரி (பி.ஐ.டி.) ஆகியவற்றின் வளர்ச்சி விகிதம் முறையே 8.32 சதவீதம் மற்றும் 26.11 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story