டெல்லியில் பன்றி காய்ச்சல்; நிபுணர்கள் எச்சரிக்கை


டெல்லியில் பன்றி காய்ச்சல்; நிபுணர்கள் எச்சரிக்கை
x

டெல்லியில் பன்றி காய்ச்சல் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம் பற்றி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.



புதுடெல்லி,



மராட்டியத்தில் கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையின்போது கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து டெல்டா, டெல்டா பிளஸ் மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகளாலும் மக்கள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், மராட்டியத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி மராட்டிய பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 142 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

மும்பையில் எச்.1.என்.1. பாதிப்புகள் 43 பேருக்கும், புனே, பால்கர் மற்றும் நாசிக்கில் முறையே 23, 22 மற்றும் 17 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. நாக்பூர் மற்றும் கோலாப்பூரில் தலா 14 பேருக்கும், தானேவின் 7 பேர், கல்யாண்-தோம்பிவிலியில் 2 பேருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதனால், புனேவில் 2 பேர், கோலாப்பூரில் 3 பேர் மற்றும் தானே மாநகராட்சியில் 2 பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் கேரளாவிலும் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

இதனை தொடர்ந்து நாட்டின் தலைநகர் டெல்லியிலும் பன்றி காய்ச்சல் தொற்று பரவுவதற்கான சாத்தியம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த பாதிப்பு அதிகரித்து இருந்தது என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி தனியார் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் அவிகுமார் கூறும்போது, பன்றி காய்ச்சல் தொற்றுக்கான பரவலுக்கான காலம் தொடங்கி உள்ளது. மராட்டியத்தில் தற்போது பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன என கூறியுள்ளார்.

இதேபோன்று, மற்றொரு தனியார் மருத்துவமனையின் மூத்த ஆலோசகரான டாக்டர் எஸ். சாட்டர்ஜி கூறும்போது, டெல்லியில் தற்போது வரை அதிக அளவு பாதிப்புகளை நான் காணவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் அது நடக்கலாம். அந்த பருவம் வரும்போது, காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிய வரும் என கூறியுள்ளார். இதனால், கைகளை சுத்தமுடன் வைத்திருத்தல், கூட்டம் நிறைந்த பகுதிகளை தவிர்க்க வேண்டும் ஆகியவை அறிவுறுத்தப்படுகிறது.


Next Story