அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைதான பிபவ் குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த மே மாதம் 13-ந் தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் புகார் அளித்தார்.

இதையடுத்து, அந்த புகாரின் பேரில் பிபவ் குமாரை போலீசார் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து கடந்த மே மாதம் 18-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி பிபவ் குமார் தாக்கல் செய்த மனுவை கூடுதல் அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் ஜாமீன் கோரி பிபவ் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிபவ் குமாருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


Next Story