அயோத்தி ராமர் கோவில் நுழைவு வாயிலில் நிறுவப்பட்ட அனுமன், கருடன் சிலைகள்... படங்கள்


தினத்தந்தி 5 Jan 2024 2:57 AM IST (Updated: 5 Jan 2024 3:05 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது.

அயோத்தி,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ராமர் கோயிலுக்குச் செல்லும் பிரதான நுழைவு வாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமன் மற்றும் கருடன் போன்றவற்றின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளையின் மூத்த அதிகாரி தெரிவித்தார். ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கற்களைப் பயன்படுத்தி இந்த சிலைகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீரத் சேத்ரா அறக்கட்டளை இந்த படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இச்சிலைகள் கோவிலுக்கு செல்லும் படிகளின் இருபுறமும் அமைக்கப்பட்ட அடுக்குகளில் நிறுவப்பட்டு உள்ளன. பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம் 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமும், மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் கொண்டது என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


Next Story