உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்கு டால்பின்- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு


உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்கு டால்பின்- யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
x

உத்தரபிரதேசத்தின் மாநில நீர்வாழ் விலங்காக டால்பினை அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் மாநில விலங்காக டால்பினை அறிவித்த யோகி ஆதித்யநாத் குளங்கள் மற்றும் பல்வேறு நீர் நிலைகளின் தூய்மையை பராமரிப்பது குறித்து பேசினார்.

மேலும் இந்த வகை டால்பின்கள் கங்கை, சம்பல், கோக்ரா,யமுனை, ராப்தி, கெருவா போன்ற நதிகளில் காணப்படுகின்றன. இந்த டால்பின்களின் எண்ணிக்கை உத்தரபிரதேசத்தில் மட்டும் 2 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே அது மாநில நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அவை நீர்வாழ் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்.


Next Story