அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்


அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்
x

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அமேதி,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ஸ்மிருதி இரானி சுமார் 200 மீட்டர் தூரம் சாலை பேரணி நடத்தினார். பேரணியில் உத்தரபிரதேச மந்திரி மயங்கஷ்வர் சரண் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி கணவர் ஜுபின் இரானி ஆகியோர் பங்கேற்றனர்.

காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில், கடந்த 2019 தேர்தலில் ராகுல் காந்தியை சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். தற்போதைய தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் காண்கிறார். அதேநேரம், இத்தொகுதிக்கு காங்கிரஸின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இங்கு ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார்? என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேதி தொகுதியில் 5ம் கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


Next Story