சிவமொக்கா உள்பட 3 மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை


சிவமொக்கா உள்பட 3 மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை
x

சிவமொக்கா உள்பட 3 மாவட்ட எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை கூட்டம் நடத்தி குறைகளை கேட்டறிந்தார்.

பெங்களூரு:-

பெங்களூருவில் கடந்த மாதம் (ஜூலை) நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், மந்திரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். தங்களை மதிப்பது இல்லை என்றும், தங்களின் பரிந்துரைகளை ஏற்பது இல்லை என்றும் கூறினர். இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா, எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் மாவட்டம் வாரியாக கேட்டு நிவா்த்தி செய்யப்படும் என்று உறுதியளித்தார். இந்த நிலையில் மாவட்டம் வாரியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வருகிறார்.இந்த நிலையில் நேற்று மைசூரு, சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இதில் எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளை அவர் கேட்டு அறிந்தார். அந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இது மட்டுமின்றி வருகிற நாடாளுமன்ற தேர்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் குறித்தும், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் சில ஆலோசனைகளை சித்தராமையா வழங்கினார். இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டார்.


Next Story