சிவசேனா கட்சி மட்டும் இல்லையென்றால் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை - சஞ்சய் ராவத்


சிவசேனா கட்சி மட்டும் இல்லையென்றால் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை - சஞ்சய் ராவத்
x

கோப்புப்படம்

அயோத்தி கோவிலில் ராம் லல்லாவின் கும்பாபிஷேகத்தை சாத்தியமாக்கியது சிவசேனா என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நாசிக்,

நாசிக்கில் நேற்று நடந்த உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி மாநாட்டில் அந்த கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கலந்து கொண்டு பேசியதாவது:-

ராமருடன் எங்களது கட்சிக்கு மிகவும் பழமையான தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு ஆழ்ந்த உணர்வுப்பூர்வமானது. இது வேறு எந்த நபருக்கோ அல்லது எந்த கட்சிக்கோ இல்லை. ராமருடன் பழமையான தொடர்பு யாருக்கேனும் இருந்தால், அது சிவசேனா கட்சிக்குதான் உள்ளது.

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகம் எங்கள் கட்சியால் தான் சாத்தியம் ஆனது. சிவசேனா கட்சி மட்டும் இல்லையென்றால் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வாய்ப்பில்லை. சிவசேனாவின் தொண்டர்கள் தைரியத்துடன் அதை நடத்தி காட்டினர். அதனால்தான் பிரதமர் மோடி, அயோத்தியில் புதிய ராமரின் சிலை பிரதிஷ்டை செய்ய முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story