மத்திய மந்திரி சபையில் இணைந்த விவகாரம்: நிதிஷ்குமார் குற்றச்சாட்டுக்கு அமித்ஷா மறுப்பு


மத்திய மந்திரி சபையில் இணைந்த விவகாரம்: நிதிஷ்குமார் குற்றச்சாட்டுக்கு அமித்ஷா மறுப்பு
x

கோப்புப்படம்

மத்திய மந்திரி சபையில் இணைந்த விவகாரம் தொடர்பான நிதிஷ்குமாரின் குற்றச்சாட்டுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ்குமார், தனது ஒப்புதல் இல்லாமலேயே தனது கட்சியை சேர்ந்த ஆர்.சி.பி.சிங்கை மத்திய மந்திரி சபையில் கடந்த ஆண்டு இணைத்ததாக குற்றம் சாட்டினார்.

இதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மறுத்து உள்ளார். பீகாரை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகளை நேற்று முன்தினம் சந்தித்த அமித்ஷா, அப்போது இந்த தகவலை வெளியிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது, ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகள் வழங்க வேண்டும் என நிதிஷ் குமார் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஒரு பதவி மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்ததாகவும் அமித்ஷா கூறியுள்ளார்.

அப்படியென்றால் ஆர்.சி.பி.சிங்குக்கு மந்திரி பதவி வழங்குமாறு நிதிஷ் குமார்தான் கேட்டுக்கொண்டதாகவும் அமித்ஷா தெரிவித்ததாக பீகார் பா.ஜனதாவினர் தெரிவித்து உள்ளனர்.


Next Story