'வாட்ஸ்அப்' மூலம் சம்மன் அனுப்புவதா? போலீசார் மீது நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு
டெல்லி பஞ்சாப் பாக் போலீஸ் நிலையத்தில் பதிவான ஒரு கொலை வழக்கு விசாரணை, கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
புதுடெல்லி,
டெல்லி பஞ்சாப் பாக் போலீஸ் நிலையத்தில் பதிவான ஒரு கொலை வழக்கு விசாரணை, கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.அப்போது அரசுத் தரப்பு சாட்சி ஒருவர் ஆஜராகாதது குறித்து கருத்து கூறிய நீதிபதி ஹேம்ராஜ், 'பல வழக்குகளில் சாட்சிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் சம்மன் அனுப்புவதை போலீசார் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
சாட்சிக்கு சம்மன் வழங்குவதற்காக குறைந்தது 3 முறையாவது அவரது வீட்டுக்கு போலீசார் செல்ல வேண்டும் என்ற நிலையில், நடைமுறையில் ஒரு தடவைகூட செல்வதில்லை.வாட்ஸ் அப் மூலம் சம்மன் அனுப்பக்கூடாது என்று துணை கமிஷனர் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியும், அதற்கு போலீசார் மதிப்பு அளிப்பதோ, கண்டிப்பாக பின்பற்றுவதோ இல்லை.எனவே டெல்லி மேற்கு மாவட்ட துணை கமிஷனர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் வாட்ஸ் அப் மூலம் சம்மன் அனுப்பிய போலீசார் நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.