ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் திட்டம் - ரெயில்வே அமைச்சகம் ஆலோசனை
செல்லப்பிராணிகளை ரெயில்களில் கொண்டு செல்லும் திட்டம் குறித்து ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
புதுடெல்லி,
ரெயில்களில் குளிர்சாதனை வசதிகொண்ட முதல்தர வகுப்புகளில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் மாற்றங்கள் செய்யுமாறு ரெயில்வே வாரியம் சி.ஆர்.ஐ.எஸ். நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட எஸ்.எல்.ஆர். கோச்சில் விலங்குகள் வைக்கப்படும். விலங்குகளின் உரிமையாளர்கள் தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றை தங்கள் செல்லப்பிராணிகளுக்கு வழங்கலாம். இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும். டிக்கெட்ட் ரத்து செய்யப்பட்டால், செல்லப்பிராணியின் டிக்கெட்டுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story