தன்பாலின திருமண விவகாரம்: மறு ஆய்வு மனுவை 10 -ம் தேதி விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு
தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்க முடியாது என்றும். அதற்கு நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
புதுடெல்லி,
ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கோரி, அத்தகைய தன்பாலின ஈர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அதை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்க முடியாது என்றும். அதற்கு நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில், வருகிற 10-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் இவ்வழக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story