இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் சந்தனக்கூடு திருவிழா - விமரிசையாக நடைபெற்ற ஊர்வலம்
வாவர் பள்ளிவாசல் சந்திப்பில் இஸ்லாமியர்களுக்கு, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எருமேலி வாவர் பள்ளிவாசலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் பிரசித்தி பெற்ற சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் யானைகள் பவனி வர மேள, தாளங்களுடன் நடைபெற்ற ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து வாவர் பள்ளிவாசல் சந்திப்பில் இஸ்லாமியர்களுக்கு, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். வெகு விமரிசையாக நடைபெற்ற வாவர் பள்ளிவாசல் சந்தனக்கூடு திருவிழா ஊர்வலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story