ரஷிய போரால் 1.77 கோடி உக்ரைனியர்களுக்கு மனிதநேயம் சார்ந்த உதவி தேவை: போலந்து


ரஷிய போரால் 1.77 கோடி உக்ரைனியர்களுக்கு மனிதநேயம் சார்ந்த உதவி தேவை:  போலந்து
x

உக்ரைனில் 1.77 கோடி பேர் ரஷிய போரால் பாதுகாப்பு மற்றும் மனிதநேய உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.



புதுடெல்லி,



உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 6 மாதங்களையும் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் ராணுவ இலக்குகள் மீதே தாக்குதல் நடத்தப்படுகிறது என ரஷியா கூறி வருகிறது.

இந்த நிலையில், ரஷிய படையெடுப்பின் விளைவால் உலக உணவு மற்றும் ஆற்றல் நெருக்கடி பற்றி இந்தியாவுக்கான போலந்து நாட்டு தூதர் ஆடம் புரகொவ்ஸ்கி ஊடக சந்திப்பில் பேசினார். அவர் கூறும்போது, உக்ரைனுக்கு முடிந்தவரை அனைத்து உதவிகளையும் போலந்து செய்து வருகிறது.

இந்திய மாணவர்கள் வெளியேறவும் உதவியது என கூறியுள்ளார். உக்ரைனில் மக்கள் உயிரிழப்பு குறைந்த அளவே உள்ளது என ரஷியா கூறுவது ஒரு கற்பனை.

ரஷிய படைகள் ஜபோரிஜியா பகுதியில் அணு உலையை ஆக்கிரமித்து அதனை ராணுவ தளம் ஆக மாற்றியுள்ளது. இதன்பின், உக்ரைன் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதுடன், அணு ஆற்றல் பேரிடரில் உலகை தள்ளும் அச்சுறுத்தலிலும் ஈடுபடும்.

கடந்த 6 மாதங்களில், ரஷிய படையெடுப்பினால் 13,560 உக்ரைனியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5,614 பேர் உயிரிழந்து உள்ளனர். 7,946 பேர் காயமடைந்து உள்ளனர்.

உக்ரைன் நகரங்கள் மற்றும் மக்களின் மீது ரஷியாவின் குண்டு வீச்சால், 1.77 கோடி உக்ரைனியர்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்நாட்டு மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் பாதுகாப்பு மற்றும் மனிதநேய உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.


Next Story