பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.2,500 பரிசு-கேரள அரசு அறிவிப்பு


பொது இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.2,500 பரிசு-கேரள அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2023 8:37 AM IST (Updated: 11 Jun 2023 11:48 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட்டிச் செல்கின்றனர். இந்த நிலையில், கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மெயில் ஐ.டி. ஆகியவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும்.

பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story