வந்தே பாரத் ரெயிலுடன் போட்டி... நொடிப் பொழுதில் உயிர் தப்பிய முதியவர்
வந்தே பாரத் ரெயில் வரும்போது தண்டவாளத்தை அவசரகதியில் கடந்த முதியவர், ரெயில் மோதாமல் நூலிழையில் உயிர் தப்பினார்.
திரூர்,
கேரள மாநிலம் திரூரில், வந்தே பாரத் ரெயில் வரும் வேளையில் தண்டவாளத்தை அவசரகதியில் கடந்த முதியவர், ரெயில் மோதாமல் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
திரூர் ரெயில் நிலையம் நோக்கி வந்தே பாரத் ரெயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் முதியவர் ஒருவர் திடீரென அவசரகதியில் தண்டவாளத்தை கடந்தார். அப்போது நொடிப் பொழுதில் ரெயில் மோதாமல் முதியவர் உயிர் தப்பினார்.
முதியவரின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Related Tags :
Next Story