சபரிமலையில் கடந்த ஆண்டை விட வருவாய் குறைவு - தேவசம்போர்டு தகவல்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சபரிமலையில் பக்தர்களின் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 28 நாட்களில் சபரிமலை கோவிலுக்கு ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
அதேசமயம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடி வருவாய் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பக்தர்களின் வருகையும் சுமார் 1.5 லட்சம் குறைந்து 18 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story