அக்னி வீரர்களுக்கு ரெயில்வேயில் அலுவலர் அல்லாத பணியிடங்களில் இட ஒதுக்கீடு - இந்திய ரெயில்வே முடிவு


அக்னி வீரர்களுக்கு ரெயில்வேயில் அலுவலர் அல்லாத பணியிடங்களில் இட ஒதுக்கீடு - இந்திய ரெயில்வே முடிவு
x

பணியாளர் தேர்வின் போது உடற்தகுதி தேர்வில் இருந்து அக்னி வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

அக்னி வீரர்களுக்கு ரெயில்வே துறையில் அலுவலர் அல்லாத பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி நேரடி பணியாளர் தேர்வு அடிப்படையில் நிலை 1 பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு, நிலை 2 மற்றும் அலுவலர் அல்லாத பணிகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பணியாளர் தேர்வின் போது உடற்தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். முதல் பிரிவு அக்னி வீரர்களுக்கு பணியாளர் தேர்வின் போது வயது உச்சவரம்பில் 5 ஆண்டுகள் வரை சலுகையும், அடுத்தடுத்த பிரிவு அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சலுகையும் அளிக்கப்படும். இது தொடர்பாக அனைத்து பொது மேலாளர்களுக்கும் ரெயில்வே வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



Next Story